ஊரடங்கு காலங்களில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விற்பனை நேரம் சில மணி நேரங்களே அனுமதிக்கப்படும் நிலையில் டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களின் நடைபாதையோர காய்கறி பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக் கிடப்பதால் சாலைகள் காய்கறி சந்தைகளில் நடமாட்டம் குறைந்தது.இதனால் தினசரி மூட்டை மூட்டையாக காய்கறிகளும் பழங்களும் விற்பனையாகாமல் அழுகும் நிலை ஏற்பட்டது.
மொத்த கொள்முதல் குறைந்ததால் காய்கறி விளைச்சலும் வரத்தும் குறையத் தொடங்கி இதன் பலனாக பல இடங்களில் விலையேற்றமும் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.