மும்பை காவல்துறையின் முன்னாள் அதிகாரியும், சிவசேனா தலைவர்களில் ஒருவருமான பிரதீப் சர்மா உள்பட 3 பேரை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
வெடிகுண்டு நிரப்பிய காரை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் முன்பு நிறுத்திய வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தேரியில் உள்ள பிரதீப் சர்மாவின் வீட்டை சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து வழக்கின் சதித்திட்டத்தில் பங்கு மற்றும் ஆவணங்களை அழிக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதே போல் மலாட் பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிஷ்சோனி ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
112 ரவுடிகளை என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்று புகழ் பெற்றவரான பிரதீப் சர்மா, போலீஸ் துறையில் உள்ள கோஷ்டி மோதல்களில் தாம் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.