வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வந்த காரணத்தால் ஓட்டுநர் உரிமம், ஆர்சி, பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற மோட்டார் வாகனங்கள் தேவையான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை 2020 பிப்ரவரி முதல் நீட்டித்தது.
இறுதியாக ஜூன் 30ம் தேதி வரை இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்னதாக அறிவித்தது.
இந்தநிலையில் வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை காலாவதியாகும் வாகன பதிவு சான்றிதழ் , லைசென்ஸ், தகுதி சான்று உள்ளிட்ட வாகனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.