நாட்டில் தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்துவதற்கு, கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படலாம் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசி திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தொகை போதுமானதாக இருக்காது என்று அவர் கூறினார்.
நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நிதி பற்றாக்குறை 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.