கொரோனா 2 ஆம் அலையின் காரணமாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மாத த்திற்கான தனது பொருளாதார அறிக்கையில் இதை தெரிவித்துள்ள ஆர்பிஐ, மாநில அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சிறிய கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவியதே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் அலையால் உள்நாட்டில் பொருட்களின் தேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.வேளாண் துறை போன்றவற்றில் தடங்கல்கள் ஏற்பட்டாலும், ஒன்றாம் அலையுடன் ஒப்பிடும் போது தொழிற்துறை உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் வேகத்தை பொறுத்தே பொருளாதார சீரடைவு ஏற்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.