நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக செய்தி வெளியான நிலையில் மத்திய அரசு அதனை மறுத்துள்ளது.
பெரு நகரங்களில் சமையல் எண்ணெய் விலை 77%, பருப்பு விலை 30% வரையிலும் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் பாமாயில் விலை 19 சதவீதம் குறைந்து கிலோவுக்கு 115 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சூரிய காந்தி எண்ணெய் விலை 16 சதவீதம் குறைந்து, கிலோவுக்கு 157 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 162 ரூபாய்க்கு விற்பனையான சோயா எண்ணெய், 15 சதவீதம் குறைந்து, 138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.