நாடு முழுவதும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கலப்படமற்ற தூய்மைமான தங்கம் என்பதை குறிப்பிடும் விதத்தில், இந்திய தர நிர்ணய அமைப்பின் BIS சான்றான ஹால்மார்க் முத்திரை தங்க நகைகளில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
மேலும், தங்க நகை விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும், தற்போது 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 35 ஆயிரத்து 879 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன.