வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியிடம் கொல்கத்தா காவல்துறையினர் காணொலியில் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கச் சட்டப் பேரவைத் தேர்தலின்போது பாஜக நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகர் மிதுன் சக்கரவர்த்தி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளுக்கு அது காரணமாக இருந்ததாகவும் கூறிக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, காணொலியில் விசாரணை நடத்தக் காவல்துறைக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து அவ்வாறே விசாரணை நடைபெற்றது.