கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பகுதியளவு பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் வங்கிகள் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசு அலுவலகத்தில் 50 விழுக்காடு பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்.
திருமணம் மற்றும் இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்கனவே உள்ள விதி பொருந்தும் என்றும், வியாழக்கிழமை முதல் குறிப்பிட்ட முறையில் பொதுப்போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.