உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கின் கால அளவு 2 மணி நேரம் குறைக்கப்பட்டு, இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், தெருவோர உணவு கடைகள் செயல்படவும் யோகி அரசு அனுமதி வழங்கியுள்ளது.