இத்தாலியில் நடக்கும் ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.
வரும் 29ம் தேதி இத்தாலியின் மடேரா என்ற நகரில் இந்த மாநாடு நடக்க உள்ளது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கினறனர்.
இதில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தினால் பெருந்தொற்றுக்கு மத்தியில் 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் முதல் சந்திப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் பல்வேறு இருதரப்பு சந்திப்புகளுக்கு வழிவகுக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.