திறந்த மனத்துடன் உள்ள சமூகத்தினருடன் இந்தியா இயல்பாகவே கூட்டாளியாக இருக்கும் என்று பிரமதர் மோடி தமது இரண்டாவது நாள் ஜி 7 மாநாட்டு உரையில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகமும் சுதந்திரமும் இந்திய நாகரீகத்தின் ஒரு பகுதி என்றும் மோடி கூறினார். திறந்த சமூக அமைப்புடைய நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் அவதூறு பிரச்சாரங்கள் நடைபெறுவதையும் மோடி வன்மையாகக் கண்டித்தார்.சைபர் இணைய வெளி ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர அதனை பலவீனப்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தீவிரவாதம், வன்முறை மிக்க கிளர்ச்சிகள், அவதூறுகள், பொருளாதார சவால்கள் போன்றவற்றை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் காக்க உறுதியளத்திருப்பதாக வெளியுறவுத் துறை கூடுல் செயலாளர் ஹரிஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் ஜி 7 நாடுகள் உறுதி பூண்டுள்ளன.