ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்திற்கு 10 ஆயிரத்து 870 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உத்திரபிரதேசத்தின் 97 ஆயிரம் கிராமங்களில் உள்ள 2 கோடியே 63 லட்சம் வீடுகளில் இதுவரை 30 லட்சத்து 4 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டுக்குள் அந்த மாநிலத்தில் 78 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.