மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த சதிகாரர், கைதாவதில் இருந்து தப்பிக்க தலைமறைவாக நாடு நாடாக தப்பியோடியவர் என்றும் இன்டர்போல் நோட்டீஸ் விடுக்கப்பட்டு தேடப்பட்ட நபர் என்றும் சிபிஐ தரப்பில் டொமினிக்கன் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் இருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் டொமினிக்கன் உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
இந்தியாவில் தமக்கு எதிராக வழக்கு ஏதுமில்லை என்று பொய்யான உறுதிமொழியை சோக்சி அளித்துள்ளதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. இதனையடுத்து மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.