ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என்று பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டின் உரையில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கிய இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கொரோனா பொருட்கள் மீதான சுங்க வரிகள், காப்புரிமை உள்ளிட்ட பலவகைக் கட்டணங்களைக் குறைப்பதற்கு உலக நாடுகள் உதவும்படியும் மோடி கேட்டுக் கொண்டார். கொரோனாவை முறியடிக்கவும் எதிர்காலத்தில் இது போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்கவும் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் பேச்சுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முழு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தார். இந்தியாவுக்கு தடுப்பூசிக்கான உபரி பொருட்களையும் மருந்துகளையும் வழங்கி, உலகம் முழுவதையும் நோயின் தொற்றிலிருந்து பாதுகாக்க மருந்து உற்பத்தியை பெரிய அளவில் அதிகரிக்கலாம் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் யோசனை தெரிவித்தார். இன்று நடைபெறும் நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துக் கொள்ள உள்ளார்.