கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பல்வேறு வகையான உருமாற்ற கொரோனாக்கள் பரவி வரும் நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்குமான காலஇடைவெளியை குறைப்பது நல்லது என சில ஆய்வுகளை குறிப்பிட்டு தகவல்கள் வெளியாகின.
இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்,காலஇடைவெளியை அதிகப்படுத்தியபோது, ஒரேயொரு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்படக் கூடிய இடர்பாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டதாகவும், அதேசமயம் அதிகம்பேருக்கு முதல் டோஸ் போடக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டதையும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் சுட்டிக்காட்டியுள்ளார்.