புதுச்சேரி சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜூன் 16ஆம் நாள் தொடங்க உள்ளதாகவும், அன்றே சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும் சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. இதில் சபாநாயகர் பதவியும், இரு அமைச்சர் பதவிகளும் பாஜகவுக்கு வழங்க என்.ஆர்.காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜூன் 16ஆம் நாள் காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என்றும், அன்றே சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.