நாட்டை விட்டு விமானத்தில் தப்பி விடுவார் என்ற அபாயம் உள்ளதால், வங்கி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க முடியாது என டொமினிகா உயர்நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
மேலும் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் சட்ட விரோதமாக குடியேறிய வழக்கில், திங்கள் கிழமை ஆஜராகுமாறும் சோக்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோக்சியை இந்திய குடிமகன் என டொமினிகா பிரதமர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், அவரை என்ன செய்வது என அங்குள்ள நீதிமன்றம் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்றவராக கூறப்படும் சோக்சி, அருகில் உள்ள டொமினிகா தீவுக்கு படகு மூலம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.