கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் பிரபல இந்தி நடிகர் ஆமீர்கான் செஸ் விளையாடி நிதி திரட்டுகிறார்.
செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் நாளை அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார்.
செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.