மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் வீணானது போக, 24 கோடியே 44 லட்சம் டோஸ் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் தற்போது ஒரு கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு மேலும் 38 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.