வங்கி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்சியை சட்டவிரோதமாக குடியேறியவர் என்று டொமினிகா அரசாங்கம் பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு, சோக்சியை கொண்டு வரும் இந்தியாவின் முயற்சிக்கு ஒரு ஊக்கமாக அமையும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் இருந்து தப்பியபின், ஆன்டிகுவா& பார்படாவில் 2018 ல் சோக்சிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி அவர் அங்கிருந்து மாயமாகி, பின்னர் அருகில் உள்ள டொமினிகாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவரை சட்டவிரோத குடியேறியாக அறிவித்து டொமினிக் உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. அவரை திருப்பி அனுப்பவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோக்சி ஆன்டிகுவாவுக்கு அனுப்பப்படுவாரா அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.