பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை திரும்ப பெறவும், அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடவும், இரண்டு மாதங்களுக்கு,வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம் என நிதி அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதன் வாயிலாக 70 கோடி பேருக்கு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிடலாம் என நிதி அமைச்சகம் தனது மாதாந்திர பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கு சுமார் 113 கோடி டோசுகள் தேவைப்படும் எனவும், தினமும் 93 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால் சமூக நோய்எதிர்ப்பு திறனை பெற்று விடலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா 2 ஆம் அலையால், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் , நடப்பு காலாண்டில் சிறிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் பல மாநிலங்கள் பொருளாதார நடவடிக்கைகளை எச்சரிக்கையுடன் துவக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.