மும்பை நகரை கனமழை புரட்டிப் போட்ட நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை முன்னகர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மகாராஷ்ட்ரா கரையை அடைந்துள்ளதையடுத்து மும்பை, பால்கர், தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தப்பட்டுள்ளது.நேற்று முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாதர், மாதுங்கா, சயான், செம்பூர் உள்ளிட்ட மையப் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்துகளும் கார்களும் அணி வகுத்து மெதுவாக நகர்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மின்சார ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன .சில தொலை தூர ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. நேற்று மாலைக்குப் பிறகு தண்ணீர் வடியத் தொடங்கியதையடுத்து படிப்படியாக மும்பை தனது இயல்புக்குத் திரும்பியுள்ளது.