கோல் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் அதன் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட 10 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளது.
பொதுத்துறை நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியாவில் 2 லட்சத்து 59ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஆறாயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 400 பேர் உயிரிழந்தனர்.
இன்னும் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிலாளர்களில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோல் இந்தியா தொழிலாளர்கள் அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடும் வகையில் 10 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.