நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 8 புள்ளி 3 விழுக்காடாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.3 விழுக்காடாகவும், 2022ம் ஆண்டில் 7.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உலகப் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 5.6 விழுக்காடாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள உலக வங்கி, இந்த நிலைமை 80 ஆண்டுகளுக்குப் பின் வலிமையானதாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.