கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் 22 போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
இதனை இந்தியப் படைகள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்தன. எல்லையில் படைக்குவிப்பு தொடர்பாக இருதரப்பிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டு ஓராண்டாகிய பின்னர், பதற்றம் குறைக்கப்பட்ட போதும் சீனப் படைகள் குறையவில்லை. இந்நிலையில், ஜே 11, ஜே 16 போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு நேர் எதிராக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.
அனைத்து வகை விமானங்களும் இயங்கும் வகையில் அண்மையில் மேம்படுத்தப்பட்ட சீனாவின் எல்லைப்பகுதி விமானப்படைத் தளங்களான ஹோட்டான், கர் குன்சா , கஷ்கர் போன்ற இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சீன விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. தங்கள் எல்லைக்குட்பட்டு பயிற்சிகளை செய்ததாக சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவும் தனது மிக் 29, சுகோய் 30 ரபேல் விமானங்களை எல்லையில் முன்கள விமானப்படைத்தளங்களில் நிறுத்தி வைத்துள்ளது.