பி.எப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்தது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை நிறுவனங்கள் பி.எப். நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் 12 எண் பயோமெட்ரிக் அடையாளத்தை பி.எப். கணக்குடன் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை பணம் எடுக்கும்போது மட்டும் தான் ஆதார் எண் அவசியமாக இருந்தது.