வங்கி மோசடி செய்து விட்டு தாம் இந்தியாவில் இருந்து தப்பிக்கவில்லை என்றும், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மட்டுமே இந்தியாவில் இருந்து வந்த தாகவும், வைர வியாபாரி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடையவராக கூறப்படும் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று கரீபியன் தீவான ஆன்டிகுவா&பார்படாவில் குடியுரிமை பெற்றார்.
அவரை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மாயமான அவர், அருகில் உள்ள டொமினிக் தீவில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடக்கிறது.
அதில் தாக்கல் செய்த சத்திய வாக்குமூலத்தில் இவ்வாறு கூறியுள்ள சோக்சி, தாம் இந்தியாவில் இருந்து புறப்படும் போது தம் மீது எந்த வாரண்டும் கிடையாது என்றும் கூறியுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு தம்மை ஜாமினில் விடுமாறும் அவர் மனு செய்துள்ளார்.