புயல் நிவாரணப் பொருட்களைத் திருடியதாக மேற்கு வங்கச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி, அவர் சகோதரர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சுவேந்து அதிகாரியின் சகோதரர் சவுமேந்து அதிகாரி, காந்தி நகராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். அவர் நகராட்சியின் கிடங்கை வலுக்கட்டாயமாகத் திறந்து அங்கிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள புயல் நிவாரணப் பொருட்களைத் திருடியதாகத் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்தவர் புகார் அளித்தார்.
இதையடுத்து சுவேந்து அதிகாரி, அவர் சகோதரர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.