பாஜக தலைமை கூறும் வரை கர்நாடகாவின் முதலமைச்சராக நீடிப்பேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சராக இருக்கும் எடியூரப்பா மாற்றப்பட்டு வேறு ஒருவர் அந்த பொறுப்புக்கு வருவார் என அண்மை காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீது கட்சித் தலைமை நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு தாம் வேண்டியதில்லை என தோன்றினால் அன்றே பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் கூறினார். கர்நாடகாவில் முதலமைச்சராக இருக்க வேறு தலைவர்கள் இல்லை என தாம் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.