2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கு எட்டப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெட்டோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக பிரதமர் கலந்துரையாடினார்.
புனேயில் மூன்று எத்தனால் உற்பத்தி மற்றும் விநியோக நிலையங்களை அவர் தொடங்கி வைத்தார். எத்தனால் என்பது குறித்த கடந்த காலங்களில் பேசப்படாத நிலையில், தற்போது நாட்டின் முக்கியமான இலக்குகளில் ஒன்றாகிவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.
2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு எண்ணெய் நிறுவனங்கள் 38 கோடி லிட்டர் எத்தனாலை வாங்கியிருப்பதாகவும் அதன் பயன் பெரும்பாலும் கரும்பு விவசாயிகளுக்கு சேர்ந்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.