கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், கொரோனாவின் 2வது அலையை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம் என்றார். இதன் காரணமாக புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதாக கூறிய அவர், இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள் என்றார்.
இந்த அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என்று கூறப்படுவதால் இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.