சிபிஐ அதிகாரிகள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ யின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றுள்ள சுபோத்குமார் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள உத்தரவில், சிபிஐ ஆண் அதிகாரிகள் சாதாரண பேண்ட், சட்டை, ஷூ அணிந்து வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜீன்ஸ், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஷேவ் செய்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் ஊழியர்கள், சாதாரண சட்டை, பேண்ட் மற்றும் புடவை அணிய வேண்டும் எனவும் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு, நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் பொருந்தும் எனவும், அனைத்து கிளை அலுவலகங்களின் தலைவர்கள், அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.