சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க, என்ன முறை கையாளப்படுகிறது என்பதை இரு வாரங்களுக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா சூழலில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி முன்பே தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கக் கையாளும் முறைகள் குறித்து இரு வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாநிலக் கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து மனுதாரர்கள் கோரிக்கை வைத்தபோது, அனைத்து மாணவர்களின் நலன்களும் காக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.