ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசியை இந்தியாவில் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக, அந்த நிறுவனங்கள் கேட்டுக் கொண்டபடி அவற்றுக்கு இழப்பீட்டு காப்பு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்ற பாதுகாப்பை வேறு நாடுகளும் இந்த நிறுவனங்களுக்கு அளித்துள்ளதால், இந்திய அரசு வழங்குவதிலும் எந்த பிரச்சனையும் இல்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை பெற இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்தால் அவற்றுக்கு இந்த இழப்பீட்டு காப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதனால், இந்த நிறுவனங்களின் தடுப்பூசியை போடும் போது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்காக யாரும் சட்டரீதியான நடவடிக்கைகளை இந்த நிறுவனங்களின் மீது எடுக்க இயலாது வரும் ஜூலை முதல் அக்டோபருக்குள் 5 கோடி தடுப்பூசி டோசுகளை இந்தியாவுக்கு வழங்க ஃபைசர் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.