ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வாலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாட்டில் தற்போது தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து பேசிய லாவ் அகர்வால், இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருவதாகக் குறிப்பிட்டார். தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் 92 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.