செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி

Jun 02, 2021 06:12:47 AM

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்சி நிர்வாகம், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் மே 4ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு தேர்வையும் நடத்த திட்டமிட்டிருந்தது.

ஆனால்  கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்ததை அடுத்து, 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்தும் அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இடையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை விரைவாக எடுக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில்தான் செவ்வாய்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாணவர்களின் நலனே முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் நன்கு வரையறுக்கப்பட்ட வழிமுறைகளுடன் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement