கொரோனா 3வது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளதால் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொற்று நோயின் 3வது அலையால் குழந்தைகளும், கிராமப்புற மக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல் வந்துள்ளதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இதற்காக அரசு எதுவும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கிராமப்புறங்களில் ஆய்வுப் பணிகள் எதுவும் நடந்துள்ளனவா என்றும் கேட்டனர்.
தடுப்பூசிகள் பல்வேறு விலைக்கு விற்கப்படுவதாகக் கூறிய நீதிமன்றம், அதற்கான கொள்கையை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.