ரஷ்யாவில் இருந்து அதிக அளவாக 20 லட்சத்து 79 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தன.
இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கோடியே 80 லட்சம் டோஸ்கள் வாங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 லட்சத்து 10 ஆயிரம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மே மாதத்தில் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை போடப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 50 லட்சம் டோஸ்களும், ஜூலை மாதத்தில் ஒரு கோடி டோஸ்களும் வாங்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.