இந்தியாவில் இரட்டைப் பிறழ்வுடன் கூடிய உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் 12 ம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியத் தொற்று B.1.617 என்று அழைக்கப்பட்டு வந்தது.
உருமாறுபாடு அடைந்த வைரஸ்களை நாடுகளின் பெயரால் அழைக்கக்கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவுக்கு கிரேக்க எழுத்துக்களின் பெயரைப் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவில் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வைரசுக்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டது.
தற்போது உள்ள B.1.617 வைரஸின் மரபணுவில் E484Q மற்றும் L452R எனப்படும் இரண்டு மாற்றங்கள் இருப்பதால் புதிய வைரசுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.