விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5 ஜி தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் அதை கொண்டுவர தடைவிதிக்க வேண்டும் என பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,5 ஜி தொழில்நுட்பத்தில் உருவாகும் கதிரியக்கம், மக்களின் உடல்நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என நம்ப தேவையான காரணங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு தாம் எதிரி அல்ல என்றும் ஜூஹி சவுலா குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் 5ஜி தொழில்நுட்பம் மனிதர்களுக்கும், எல்லாவிதமான உயிரினங்களுக்கும் பாதுகாப்பானது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் சான்றளிக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.