கொரோனா இரண்டாவது அலையில், முதன்முதலாக, டெல்லியில் தினசரி தொற்று எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழே சென்றுள்ளதால், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் சுமார் 900 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறினார். தொற்று எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 19 ஆம் தேதி, டெல்லியில் கொரோனா தொற்று விகிதம்27 ஆக இருந்த்து. இப்போது அது 2 சதவிகிதமாக குறைந்துள்ளது. எனினும் ஏப்ரல் 19 முதல் நேற்று வரை அங்கு கொரோனாவுக்கு மொத்தம் 11ஆயிரத்து 590 பேர் பலியாகினர்.