புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ்ஆப் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருப்பது அத்துமீறிய ஒரு செயல் என அரசு தெரிவித்துள்ளது.
புதிய டிஜிட்டல் கொள்கையில் சில விதிகள் தனியுரிமை காப்புக்கு எதிரானது என கூறி வாட்ஸ்ஆப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
ஆனால் தனியுரிமை காப்பு என்பது நூற்றுக்கு நூறு முழுமையானது அல்ல என்றும் அதில் நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
சட்ட விரோதமான, கலவரங்களை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களை 72 மணி நேரத்திற்குள் சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும் போன்ற விதிகள் புதிய டிஜிட்டல் கொள்கையில் உள்ளன. இந்தியாவில் இருந்து செயல்படும் எந்த நிறுவனமும் நாட்டின் சட்டங்களை மீறி இயங்க முடியாது என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.