தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மத்திய அரசு மதிக்கிறது, ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை வாட்ஸ் ஆப் தெரிவிக்க கோருவது உரிமையை மீறுவதாகாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
தனிநபர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதை, அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று அரசுத் தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த ஒரு அடிப்படை உரிமையும் நியாயமான கட்டுப்பாடுகள் உடையதுதான் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். வாட்ஸ் ஆப் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.