பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரானுடன் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இருதரப்பு நல்லுறவு , வர்த்தகம், மற்றும் பல சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ் அரசு செய்த உதவிகளுக்கு பிரதமர் மோடி மாக்ரனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாட்டில் எழுந்துள்ள சுதந்திர வர்த்தகம், முதலீடு ஒப்பந்தங்கள் போன்றவை திருப்தியளிப்பதாக இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்துளளனர்.
நிலைமை சீரான பிறகு மாக்ரான் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.