வெறும் 18ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் மும்பையைச் சேர்ந்த பயணி ஒருவர் தன்னந்தனியாக துபாய்க்கு பயணித்துள்ளார்.
பாவேஷ் ஜாவேரி என்பவர் துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகளால் பயணிகள் யாரும் வராத நிலையில், முன்பதிவு செய்திருந்த பாவேஷுகாக மட்டும் எமிரேட்ஸ் நிறுவனம் அந்த விமானத்தை இயக்கியுள்ளது.
மும்பையில் இருந்து துபாய்க்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவிட்டு ஒரேஒரு பயணிக்காக மட்டும் விமானம் இயக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய எமிரேட்ஸ் நிறுவனம், துபாயில் இருந்து மும்பைக்கு மறுமார்க்கத்தில் இந்த விமானம் இயக்கப்படவேண்டும் என்பதால் ஒரேஒரு பயணியை கொண்டு விமானத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளது.