அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ்ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த புதிய கொள்கையால், வாட்ஸ்ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என்பதால், வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. மெசேஜிங் செயலிகளில், பயனர்களின் சாட்டிங்களை டிரேஸ் செய்ய வேண்டும் என்பது, அடிப்படையில் அவர்களின் ரகசியம் காக்கும் உரிமைக்கு வேட்டு வைப்பது போன்றதாகும் என, 40 கோடி இந்திய பயனர்களை வைத்துள்ள வாட்ஸ்ஆப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ்ஆப் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் விதிகளில் ஒன்று, இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் தனது மனுவில் வாட்ஸ்ஆப் கூறியுள்ளது