குஜராத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஜூலை 1 ஆம் தேதி முதல் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்வு நடத்தப்படவுள்ளதாக குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 6 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில், ஒரு அறையில், 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்களுக்கு தங்களின் குடியிருப்புக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.