5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரெஸைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்தும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறித்தும் இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை அதிகரிப்பது, சமமாக அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குவது குறித்தும் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டினார்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.