கொரோனாவால் பலியான தங்களது ஊழியர்களின் குடும்பத்தினருக்கு, ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதான 60 வயது வரை தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மரணமடைந்த ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளம் இதற்காக கணக்கிடப்படும் என தெரிவித்துள்ளது. அதே போன்று இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவ வசதிகள், வீட்டு வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படும். டாடா ஸ்டீல் நிறுவனப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி அவர்கள் கொரோனா பாதித்து இறந்தால்,அவர்களின் பிள்ளைகளின் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து செலவையும் டாடா நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.